ETV Bharat / city

சென்னைக்கு மிக அருகே சாலையில் ஓடும் கழிவுநீர்...கண்டுகொள்ளாத அலுவலர்கள்... - மழைநீர் கால்வாய்

தாம்பரம் அருகே, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடியது. இதனால், மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

சாலையில் ஓடும் கழிவுநீர்
சாலையில் ஓடும் கழிவுநீர்
author img

By

Published : Sep 2, 2022, 8:48 PM IST

சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 69ஆவது வார்டு நரிக்குறவர் காலனி - இரட்டைமலை சீனிவாசன் தெருவில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மப்பேடு நரிக்குறவர் காலனியில் உள்ள இரு தெருக்களில் கடந்த 2012ஆம் ஆண்டு சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த கால்வாய்கள் இன்று வரை தூர்வாரப்படாததால் தற்போது பெய்த மழையால் கழிவுநீருடன் சாலையை ஆக்கிரமித்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நீரில் கால்வைத்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.

மக்கள் நடமாடவே சிரமாகியுள்ளது. இந்த நரிக்குறவர் காலனி பகுதியில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் தெரு, அம்பேத்கர் தெரு உள்ளிட்ட அனைத்து தெருக்களில் மழைநீர் கால்வாயில் பிளாஸ்டிக் மற்றும் மரக்கழிவுகள் அடைத்திருப்பதால் பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் முறையாக குப்பைகளை அகற்றாததால் சாலையோரங்களில் குப்பைகள் குவியலாக காணப்படுகிறது.

மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில், லட்சக்கணக்கில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி, இப்பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மழைநீர் கால்வாயினை தூர்வாரி, இப்பகுதியில் சாலைகளில் தேங்கி நிற்கும், கழிவுநீரினை அகற்றி இனி சாலைகளில் நீர் தேங்காமலும் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

சென்னைக்கு மிக அருகே சாலையில் ஓடும் கழிவுநீர்...கண்டுகொள்ளாத அலுவலர்கள்...

இதையும் படிங்க: குடைக்குள் மழை போல், பேருந்துக்குள் மழை; அவதிப்பட்ட பொதுமக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.