ETV Bharat / city

ஸ்ரீமதி உடலைப்பெற ஒப்புக்கொண்ட பெற்றோர் - நாளை மாலைக்குள் இறுதிச்சடங்கை முடிக்க உத்தரவு! - கள்ளக்குறிச்சி மாணவிக்கு இறுதிசடங்கு

உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் உத்தரவாதம் அளித்ததால், நாளை (ஜூன் 23) மாலைக்குள் இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Parent accepted to get Dead body of Sri mathi in Kallakurichi Issue

author img

By

Published : Jul 22, 2022, 1:56 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு உத்தரவிட்டிருந்தார்.

தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில், இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து நேற்று (ஜூலை 21) காலை இவ்வழக்கு திரும்பப்பெறப்பட்டது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு, மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு நகலை தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.

'நீதிமன்றத்தை நம்புகிறீர்களா...?': அதை முழுமையாகப் படித்துப்பார்த்த நீதிபதி, நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தடயவியல் துறையில் இருந்து ஓய்வுபெற்ற நிபுணரான சாந்தகுமாரிடமும் நீதிபதி சில விளக்கங்களை கேட்டு பெற்றுக்கொண்டார்.

அதற்கு விளக்கம் அளித்த சாந்தகுமார், அரசு மருத்துவர்களால் இரண்டு முறையும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, இரண்டு முறையும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாவது முறை உடற்கூராய்வு செய்தபோது, புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

'மகளின் உடலைவைத்து பந்தயம் காட்டாதீர்கள்': பின்னர் நீதிபதி, மனுதாரர் தரப்பிடம், "மகளை இழந்த பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. அதேநேரம், நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்னை ஏற்படுத்துகிறீர்கள். இதற்கு, அமைதியான தீர்வு காண வேண்டும். மகளின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள்" என்றார்.

மேலும், மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற போவதில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி,"வன்முறையில் பாதித்த மாணவர்களை குறித்து யாரும் பேசவில்லை. இந்த வன்முறையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும்" என்றார். உடனே, 'இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசித்துள்ளார்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

'சமூக வலைதளங்கள் முழுவதும் வதந்தி': தொடர்ந்து, மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டிய நீதிபதி, அது மனுதாரர் தரப்பிற்கு தெரியாமலேயே நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மாணவி மரணம் தொடர்பாக சமூக ஊடகங்கள் முழுவதும் பொய் செய்தியை பரப்பி உள்ளன என்றும் குற்றஞ்சாட்டினார்.

அதன்பின்னர் உடற்கூராய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையின் மருத்துவர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அறிக்கைகள் மற்றும் வீடியோ பதிவுகளை ஜிப்மர் தரப்பிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டார்.

'மகளின் ஆன்மா இளைப்பாறட்டும்': பின்னர், மனுதாரர் தரப்பிடம் நீதிபதி, "மாணவி இறந்து 10 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், எப்போது உடலைப் பெற்றுக்கொள்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பியதுடன், உடலைப் பெற்று கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கை நடத்தும்படியும், மகளின் ஆன்மா இளைப்பாறட்டும் என்றும் கூறினார்.

மகளின் உடலை நாளை (ஜூலை 23) நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாகத் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை சட்டப்படி இறுதிச்சடங்குகளை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, எப்போது உடலைப் பெறுவீர்கள் என மனுதாரர் தரப்பைக் கேட்டு இன்று 12 மணிக்கு தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

அதன்படி, உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் உடலை நாளை (ஜூன் 23) பெற்றுக்கொள்வதாக பெற்றோர்கள் தரப்பில் உத்தரவாதம் அளித்ததால், நாளை மாலைக்குள் இறுதிச்சடங்கையும் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையை ஜிப்மரில் ஆய்வு செய்ய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.