சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மதுரை எம்பி சு.வெங்கடேஷ், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே ? நீங்க சொன்ன இடத்தை ஒரு மணி நேரம் தேடினோம் என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பதாகைகள் ஏந்தி புகைப்படங்கள் வெளியிட்டனர்.
இது இணைய தளத்தில் வைரலாகியது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா ஏன் நிறுத்திக் கொண்டார்?
-
மதுரை ஏய்ம்ஸ் (AIIMS)
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்?
பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?
">மதுரை ஏய்ம்ஸ் (AIIMS)
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2022
மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்?
பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?மதுரை ஏய்ம்ஸ் (AIIMS)
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2022
மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்?
பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?
பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1,000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே..? எனப் பதிவிட்டு விமர்சித்துள்ளார். இந்த பதிவு இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:திமுக எம்பி ஆ.ராசாவை கடுமையாக சாடிய செல்லூர் ராஜூ