ETV Bharat / city

ஆரிய-திராவிடப் போர்: கி. வீரமணி - kerala

சென்னை: தீபாவளி-ஓணம் பண்டிகைகள் மதவிழாக்களாக தோற்றமளித்தாலும்  உண்மையில் அவை ஆரிய-திராவிடப் போரே என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

veeramani
author img

By

Published : Sep 11, 2019, 3:41 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவிலும், கேரளாவுக்கு வெளியேயும் உள்ள மலையாளி சகோதரர், சகோதரிகளும் கொண்டாடும் ஓணம் என்ற திருவிழாவின் அடிப்படையும், இங்கே தமிழ்நாட்டிலும், இதர பகுதிகளிலும் நம் இன எதிரிகளால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையின் அடிப்படையும் ஒன்றே ஆகும். ஆனால் ஒரேயொரு வேறுபாடு உண்டு; இரண்டும் ஆரிய - திராவிட இனப் போராட்டமேயாகும்.

திராவிடர்களின் உரிமையை, மண்ணை, ஆரியர்கள் எப்படி நயவஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும் பறித்தார்கள்-அபகரித்தார்கள் என்ற வரலாற்று உண்மைகள் புதைந்த கற்பனை மெருகேற்றப்பட்ட கதைகள் அடிப்படையில் சொல்லப்படுகின்றன.

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தான்!

1. இரண்யாட்சதன் என்ற ஒரு அசுரன் தேவர்களுக்கு எதிராக அவர்களை அழிக்கும் பணியில் இருந்தமையால், தங்களைக் காப்பாற்ற தேவர்கள் வேண்ட, மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து வந்து, அவன் பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்ததை மீட்டாராம். பிறகு, பூமாதேவிக்கும்-இரண்யாட்சதனுக்கும் பிறந்த நரகாசுரன் மிகவும் தொல்லை கொடுக்க, அவனை அழிக்க, பெண்ணுருவில் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு, மோகினியின் அழகில் நரகாசுரன் மயங்கிய நிலையில், அவனைக் கொன்றாராம்; அவன், தன் இறந்த நாளைக் கொண்டாடும்படியாகக் கேட்டதால், தீபவாளி நரகாசுரன் ஒழிந்த நாள் என்பது திராவிடனை-ஆரியன் அழித்த கதைப் பின்னணியே!

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தான் இந்த உண்மையை - வரலாற்றுப் பின்னணியை மக்கள் மத்தியில் இன்றும் கூறி வருகிறது!

இதுபோன்றே மாவலி மன்னனை (அவன் அசுரன் - நேர்மையாக கேரளத்தை ஆண்டு, மக்கள் முழு மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்) மலையாளத்தில் உள்ள க்ஷத்திரியர்களை பரசுராமர் அவதாரம் எடுத்து கோடரியால் வெட்டிக் கொன்றார் மகாவிஷ்ணு (பரசு - என்றால் கோடரி) என்பது ஒரு அவதாரம்.

வாமன அவதார இரகசியம்!

நல்லாட்சி புரிந்த மாவலியை ஒழித்துக்கட்ட தந்திரம் செய்தது ஆரியம். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து (குள்ளப் பார்ப்பான்) மாவலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டான். கபடமற்ற மாவலியும் ஏற்றுக்கொண்டான். குள்ளப் பார்ப்பானாகிய வாமனன் என்ன செய்தான்? ஓரடியை ஆகாயத்தில் வைத்தான்; இன்னொரு அடியைப் பூமியில் வைத்தான். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று வாமனன் கேட்க, மாவலி தன் தலையில் வைக்குமாறு கூறினான். அவ்வாறு மாவலி தலையில் காலை வைத்து அழுத்திக் கொன்றான் வாமனன். இதுதான் வாமன அவதார இரகசியம்.

மண் முழுவதையும் பறித்துக்கொண்ட - பண்பாட்டுப் படையெடுப்பு அல்லவா இது! உழைத்த திராவிடர்களை - அவர்களின் நிலங்களை சூழ்ச்சியால் பறித்த பின்னணியே அந்தக் கதை. மாவலி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தான் தானங்கொடுத்துவிட்ட நிலத்தை - மக்களை சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டான். மாவலி தங்களைச் சந்திக்க வருவதை கேரள மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள் - அதுதான் திருவோணம் என்ற பண்டிகை.

மராத்தியத்தில் ஜோதிபாபூலே அவர்கள் (அக்காலத்தில் ‘‘மகாத்மா’’ என்று அம்மக்களால் அழைக்கப்பட்ட சமூகப் புரட்சியாளர்) பாலி ராஜா திரும்புதலைப் பெரும் விழாவாகக் கொண்டாட வைத்தார்!

அவரும் ‘‘பார்ப்பனர் எப்படி சூத்திரர், பஞ்சமர் மண்ணை அபகரித்தனர் - வஞ்சகத்தால் என்பதே அவதாரக் கதைகள்’’ என்று தந்தை பெரியார் கூறியதைப் போலவே 150 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதியவர்!

ஏ.வி.சக்திதரன் எழுதிய கடவுளின் தேசம் நூல்

கேரளத்தை - ‘‘கடவுளின் தேசம்‘’ (God's Own Country) என்று அழைத்துக் கொள்வர். அதனை அப்படியே எதிர்த்து, மாற்றி அது ‘‘கடவுளின் தேசமா? இல்லை கடவுள் எதிர்ப்பாளர்களின் தேசமும்கூட’’ என்று அங்கே நடந்த போராட்டங்கள் - எப்படி பார்ப்பனீயம் - ஆரியம் - வெற்றி பெற்றது என்பதை - பல கதைகளின் வரலாற்றுப் பின்னணியை அம்பலப்படுத்தி - Antigod's Own Country - A Short History of Brahminical Colonisation of Kerala - By A.V. Sakthidharan (ஏ.வி.சக்திதரன் ‘‘இந்துஸ்தான் டைம்ஸ்’’ ஏட்டில் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று இன்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்) என்பவர் எழுதியுள்ள ஆங்கில நூல் ஏராளமான தகவல்களுடன் வந்துள்ளது!

தந்தை பெரியார் இயக்கம்பற்றியும், நடிகவேள் எம்.ஆர். இராதா இராமாயண நாடகம் நடத்தியது - ‘இரண்யன்’, ‘இராவண காவியம்‘ - புலவர் குழந்தை, ‘‘இராவணப் பெரியார்’’ - எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை எழுதிய நூல்கள் உள்பட பலவற்றையும் இதில் (பக்கம் 87) குறிப்பிடுகின்றார்.

ஆரியம் அபகரித்த கதைகளே!

ஆரிய - திராவிடப் போராட்டத்தின் அடிப்படையே இந்த இருவிழாக்களும் - ஆரியம் அபகரித்தக் கதைகளே! ”வாமன ஜெயந்தி” ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கேரளாவில் கால் பதிக்க - ஓணத்தைக் கொச்சைப்படுத்தி - சில ஆண்டுகளுக்குமுன் ‘‘வாமன ஜெயந்தி’’ என்று புதிதாக ஏற்பாடு செய்தபோது பெரும் எதிர்ப்பையும் சந்தித்தது. அமித்ஷா, பா.ஜ.க. தலைவரான பிற்பாடு இது திடீரென நுழைக்கப்பட்டது.

எனவே, விழாக்கள் வெளிப்பார்வைக்கு மதவிழாக்களாக தோற்றம் இருப்பினும், உண்மைத் தத்துவத்தில் - வரலாற்றுப் பின்னணியில் அது ஆரிய - திராவிடப் போரே! பார்ப்பனர் எப்படி பார்ப்பனரல்லாத சூத்திர, பஞ்சமர்களை, புத்த நெறியினரை, சமணத்தவர்களை வஞ்சித்தனர் என்பதை இந்நூலைப் படித்துப் புரிந்துகொள்ளலாம். விரைவில் இதன் தமிழ்ப் பதிப்பை முற்போக்கு பதிப்பகத்தினர் வெளியிடுவர் - இது ஆங்கிலத்தில் ‘நவயானா’ வெளியீடாக வந்துள்ளது. பொங்கலைப் போலவே ஓணம் என்ற ஒரு அறுவடைத் திருவிழா - பொங்கும் மகிழ்ச்சிக்கான விழா என்ற பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்டெடுக்கப்படவேண்டும், அது குறித்துத் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய தருணமும் இதுவாகும்.அந்த அடிப்படையில், புதிய கோணத்தில் மாவலியை வரவேற்கும் விழாவாகிய ஓணத் திருவிழாவிற்கு நாம் வாழ்த்துக் கூறுகிறோம்" என்று கி. வீரமணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:Body:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

தீபாவளி - ஓணம் பண்டிகைகள் மதவிழாக்களாக தோற்றமளித்தாலும்  உண்மையில் அவை ஆரிய - திராவிடப் போரே!

தீபாவளி, ஓணம் பண்டிகைகள் மத விழாக்களாக தோற்றமளித்தாலும்  உண்மையில்  அவை ஆரிய - திராவிடப் போரே  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கேரளாவிலும், வெளியே உள்ள கேரள மலையாளி சகோதரர், சகோதரிகளும் கொண்டாடும் ஓணம் என்ற திருவிழாவின் அடிப்படையும், இங்கே தமிழ்நாட்டிலும், இதர பகுதிகளிலும் நம் இன எதிரிகளால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையின் அடிப்படையும் ஒன்றே ஆகும். ஒரு வேறுபாடு உண்டு.

இரண்டும் ஆரிய - திராவிட இனப் போராட்டமேயாகும்.

திராவிடர்களின் உரிமையை, மண்ணை, ஆரியர்கள் எப்படி நயவஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும் பறித்தார்கள் - அபகரித்தார்கள் என்ற வரலாற்று உண்மைகள்     புதைந்த கற்பனை மெருகேற்றப்பட்ட கதைகள் அடிப்படையில் சொல்லப்படுகின்றன.

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தான்!

1. இரண்யாட்சதன் என்ற ஒரு அசுரன் தேவர்களுக்கு எதிராக அவர்களை அழிக்கும் பணியில் இருந்தமையால், தங்களைக் காப்பாற்ற தேவர்கள் வேண்ட, அவர் வராக (பன்றி) அவதாரம் எடுத்து வந்து, அவன் பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளிந்ததை மீட்ட பிறகு - பூமாதேவிக்கும் - இரண்யாட்சதனுக்கும் (அசுரன்) பிறந்த நரகாசுரன் மிகவும் தொல்லை கொடுக்க, அவனை அழிக்க, பெண்ணுருவில் மோகினி அவதாரம் கொள்ள, அதில் அவன் மயங்கியதால், அவனைக் கொன்றாராம்;  அவன், தன் இறந்த நாளைக் கொண்டாடும்படியாகக் கேட்டதால், தீபவாளி நரகாசுரன் ஒழிந்த நாள் என்பது திராவிடனை - ஆரியன் அழித்த கதைப் பின்னணியே!

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தான் இந்த உண்மையை - வரலாற்றுப் பின்னணியை மக்கள் மத்தியில் இன்றும் கூறி வருகிறது!

இதுபோன்றே மாவலி மன்னனை (அவன் அசுரன் - நேர்மையாக கேரளத்தை ஆண்டு, மக்கள் முழு மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்) மலையாளத்தில் உள்ள க்ஷத்திரியர்களை பரசுராமர் அவதாரம் எடுத்து கோடரியால் வெட்டிக் கொன்றார் மகாவிஷ்ணு  (பரசு - என்றால் கோடரி) என்பது ஒரு அவதாரம்.

வாமன அவதார இரகசியம்!

நல்லாட்சி புரிந்த மாவலியை ஒழித்துக்கட்ட தந்திரம் செய்தது ஆரியம். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து (குள்ளப் பார்ப்பான்) மாவலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டான். கபடமற்ற மாவலியும் ஏற்றுக்கொண்டான். குள்ளப்  பார்ப்பானாகிய  வாமனன் என்ன செய்தான்? ஓரடியை ஆகாயத்தில் வைத்தான்; இன்னொரு அடியைப் பூமியில் வைத்தான். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று வாமனன் கேட்க, மாவலி தன் தலையில் வைக்குமாறு கூறினான். அவ்வாறு மாவலி தலையில் காலை வைத்து அழுத்திக் கொன்றான் வாமனன். இதுதான் வாமன அவதார இரகசியம்.

 மண் முழுவதையும் பறித்துக்கொண்ட - பண்பாட்டுப் படையெடுப்பு அல்லவா இது! உழைத்த திராவிடர்களை - அவர்களின் நிலங்களை எப்படி சூழ்ச்சியால் பறித்த பின்னணியே அந்தக் கதை. மாவலி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்தான் தானங்கொடுத்து விட்ட நிலத்தை - மக்களை சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டான். மாவலி தங்களைச் சந்திக்க வருவதை கேரள மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள் - அதுதான் திருவோணம் என்ற பண்டிகை.

மராத்தியத்தில் ஜோதிபாபூலே அவர்கள் (அக்காலத்தில் ‘‘மகாத்மா’’ என்று அம் மக்களால் அழைக்கப்பட்ட சமூகப் புரட்சியாளர்) பாலி ராஜா திரும்புதலைப் பெரும் விழாவாகக் கொண்டாட வைத்தார்!

அவரும் ‘‘பார்ப்பனர் எப்படி சூத்திரர், பஞ்சமர் மண்ணை அபகரித்தனர் - வஞ்சகத்தால் என்பதே அவதாரக் கதைகள்’’ என்று தந்தை பெரியார் கூறியதைப் போலவே 150 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து எழுதியவர்!

ஏ.வி.சக்திதரன் எழுதிய கடவுளின் தேசம் நூல்!

கேரளத்தை - ‘‘கடவுளின் தேசம்‘’  (God's Own Country) என்று அழைத்துக் கொள்வர். அதனை அப்படியே எதிர்த்து, மாற்றி  அது ‘‘கடவுளின் தேசமா? இல்லை கடவுள் எதிர்ப்பாளர்களின் தேசமும்கூட’’  என்று அங்கே நடந்த போராட்டங்கள் - எப்படி பார்ப்பனீயம் - ஆரியம் - வெற்றி பெற்றது என்பதை - பல கதைகளின் வரலாற்றுப் பின்னணியை அம்பலப்படுத்தி - Antigod's Own Country - A Short History of Brahminical Colonisation of Kerala - By A.V. Sakthidharan (ஏ.வி.சக்திதரன் ‘‘இந்துஸ்தான் டைம்ஸ்’’ ஏட்டில் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று இன்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்) என்பவர்  எழுதியுள்ள ஆங்கில நூல் ஏராளமான தகவல்களுடன் வந்துள்ளது!

தந்தை பெரியார் இயக்கம்பற்றியும், நடிகவேள் எம்.ஆர். இராதா இராமாயண நாடகம் நடத்தியது - ‘இரண்யன்’, ‘இராவண காவியம்‘ - புலவர் குழந்தை, ‘‘இராவணப் பெரியார்’’ - எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை எழுதிய நூல்கள் உள்பட பலவற்றையும் இதில் (பக்கம் 87) குறிப்பிடுகின்றார்.

ஆரியம் அபகரித்த கதைகளே!

எனவே, ஆரிய - திராவிடப் போராட்டத்தின் அடிப்படையே இந்த இருவிழாக்களும் - ஆரியம் அபகரித்தக் கதைகளே!

”வாமன ஜெயந்தி”

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கேரளாவில் கால் பதிக்க  - ஓணத்தைக் கொச்சைப்படுத்தி - சில ஆண்டுகளுக்குமுன் ‘‘வாமன ஜெயந்தி’’ என்று புதிதாக ஏற்பாடு செய்தபோது பெரும் எதிர்ப்பையும் சந்தித்தது. அமித்ஷா, பா.ஜ.க. தலைவரான பிற்பாடு இது திடீரென நுழைக்கப்பட்டது.

எனவே, விழாக்கள் வெளிப்பார்வைக்கு மதவிழாக்களாக தோற்றம் இருப்பினும், உண்மைத் தத்துவத்தில் - வரலாற்றுப் பின்னணியில் அது ஆரிய - திராவிடப் போரே! பார்ப்பனர் எப்படி பார்ப்பனரல்லாத சூத்திர, பஞ்சமர்களை, புத்த நெறியினரை, சமணத்தவர்களை வஞ்சித்தனர் என்பதை இந்நூலைப் படித்துப் புரிந்துகொள்ளலாம். விரைவில் இதன் தமிழ்ப் பதிப்பை முற்போக்கு பதிப்பகத்தினர் வெளியிடுவர் - இது ஆங்கிலத்தில் ‘நவயானா’ வெளியீடாக வந்துள்ளது.

பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்!

பொங்கலைப் போலவே ஓணம் என்ற ஒரு அறுவடைத் திருவிழா - பொங்கும் மகிழ்ச்சிக்கான விழா என்ற பறிக்கப்பட்ட உரிமைகள்  மீட்டெடுக்கப்படவேண்டும், அது குறித்துத் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய தருணமும் இதுவாகும்.

அந்த அடிப்படையில், புதிய கோணத்தில் மாவலியை வரவேற்கும் விழாவாகிய  ஓணத் திருவிழாவிற்கு நாம்  வாழ்த்துக் கூறுகிறோம்.

                                                                                                          கி.வீரமணி

சென்னை                                                                                                                                         தலைவர்,

11.9.2019                                                                                                                              திராவிடர் கழகம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.