ETV Bharat / city

தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் - chennai district

தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை, இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

பன்னீர்செல்வம் கடிதம்
பன்னீர்செல்வம் கடிதம்
author img

By

Published : Oct 16, 2021, 7:04 PM IST

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை, இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் 13-10-2021 அன்று கைது செய்த சமீபத்திய நிகழ்வை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். மேலும் இரண்டு இயந்திர படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்கள் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவார்கள் என்ற அச்சத்துடன் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்குச் செல்கின்றனர். இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே பெரும் பதற்றத்தையும் அமைதியின்மையையும் உருவாக்குகிறது.

இந்த தீவிரமான பிரச்சினையில் உங்கள் கனிவான தலையீட்டை நான் கோருகிறேன், மேலும் தமிழ்நாட்டின் 23 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நான் இன்னும் விட்டுப்போகவில்லையே - அடுத்த சீசன் குறித்து தோனி சூசகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.