மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழியை பிரபலப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டில் பல மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அனைத்து மொழிகளுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு.
ஆனால், இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி ஒரு மொழிக்கு உண்டு என்றால் அது பெரும்பான்மை இந்தியர்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்" என பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த ட்விட்டர் பதிவு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும், இந்தியை திணிப்பதற்கான முன் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது எனவும் அந்த கனவு ஒருபோதும் பலிக்காது எனவும் எதிர்க்கட்சியினர் உட்பட பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில், #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது. அதுமட்டுமின்றி, #StopHindiImposition, #StopHindiImperialism, #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.