இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "அண்மையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் என ஐந்து மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மண்டலத்தில் மாவட்டம், ஒன்றியம், நகரம் என்கிற நிலைகளில் ஐடி விங் (IT WING) பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
திறமை, கட்சி விஸ்வாசத்தின் அடிப்படையில் பொறுப்பாளர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொறுப்பாளர் நியமனங்களில் திறமையானவர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்ற கொள்கைப்படியும், நியமனத்தில் வெளிப்படை தன்மையிருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் மூன்று பிரிவுகளின்படி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதன்படி,
1. Personal background (தனிப்பட்ட பின்னணி)
2. AIADMK P-SAT(Political and social media awareness and aptitude test) (அரசியல், சமூக ஊடக விழிப்புணர்வு மற்றும் திறனாய்வு தேர்வு)
3. Personal interview (நேர்காணல்) மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் www.aiadmkitwing.com/chennai என்கிற இணையதளத்தில் 1 மற்றும் 2ஆம் பகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம்!