சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் அது மனித உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும். ஆனால், இந்த அரசாணையின்படி மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே, இது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நிதிபதிகள் டாஸ்மாக் நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பாகவே அரசாணை பிறப்பித்தது.
அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது. அதேநேரம், தற்போது வரை மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கணவர் இறந்த துக்கத்தில் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!