சென்னை: கேரளாவில் 2017ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத கும்பல் ரகசியமாக பயங்கரவாத பயிற்சி அளித்தது தொடர்பாக 2020இல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 20 இடங்களில் என்ஐஏ தற்போது சோதனை நடத்திவருகின்றது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 12 இடங்களில் அதிரடியாகச் சோதனை நடைபெற்றுவருகிறது. பெங்களூருவில் ஐந்து இடங்களிலும், கேரளாவில் மூன்று இடங்களிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: கோவையில் என்ஐஏ அதிரடி சோதனை