நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 130ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, ‘இந்தியாவுக்கு ஒரு வடிவத்தை கொடுத்து இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த அற்புதமான தலைவர் நேரு. காஷ்மீரை இந்தியாவோடு ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் இணைத்தார். அதேபோல் இந்தியாவின் வருமையை போக்க பொருளாதார கொள்கையை காந்திய தத்துவத்தின் அடிப்படையாக அமைத்து உலகத்திற்கு வழங்கினார்கள்.