அட்டகத்தி தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார்.
![dinesh, ananthi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-gundu-script-7204954_09102019224745_0910f_1570641465_473.jpg)
கிஷோரின் ஒளிப்பதிவில், த. இராமலிங்கத்தின் கலை இயக்கத்தில், செல்வாவின் எடிட்டிங்கில் வெளிவரும் இப்படத்திற்கு உமாதேவி, தனிக்கொடி பாடல்களை இயற்றியிருக்கிறாகள். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருக்கிறது.
![ananthi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-gundu-script-7204954_09102019224745_0910f_1570641465_110.jpg)
நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த முதல் படமான 'பரியேறும் பெருமாள்' மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது தயாரிப்பான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' திரைப்படமும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது.
ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் வட தமிழ்நாட்டின் வாழ்வியலோடு உலக அரசியலை இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இத்திரைப்பட இயக்குநர் அதியன் ஆதிரை தெரிவித்தார்.
![neelam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-gundu-script-7204954_09102019224745_0910f_1570641465_867.jpg)
இதையும் படிங்க: ’வெறித்தன’மான நடனத்துடன் நன்றி தெரிவித்த சாண்டி!