அதிமுக கொள்கைபரப்பு முன்னாள் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தற்போது அரசியலிலிருந்து ஒதுங்கி, கலைத்துறையில் பயணித்துவருகிறார்.
மதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம்வந்த அவரை, இன்னோவா காருடன் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்து அதிமுகவிற்கு அழைத்து வந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா இருந்தவரை அவரின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட நாஞ்சில் சம்பத், அவரின் மறைவிற்குப் பின்னர் டிடிவிதினகரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அதன்பின் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அங்கிருந்து விலகிஅரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொகுதியை பெரிது செய்ததில்; வேட்பாளரை தேர்வு செய்ததில் - 100 மதிப்பெண் வாங்கிவிட்டார் அண்ணன் ஸ்டாலின். வெற்றி அவருடைய வாசலில். வாழ்த்தி மகிழ்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது, ட்விட்டரில் பதிவிட்ட அவரது கருத்துதிமுகவில் இணைய இருப்பதை காட்டுவதாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.