ETV Bharat / city

‘ஆன்டி இந்தியன்’ படத்திற்கு சென்சாரில் 38 கட் - ப்ளூ சட்டை மாறன்! - சென்சார் குறித்து பேசிய ப்ளூ சட்டை மாறன்

'ஆன்டி இந்தியன்' திரைப்படத்தில் 38 கட் வேண்டும் என்று தணிக்கைக் குழுவினர் கூறியதாவும், ஆனால் நீதிமன்றத்தை நாடி எந்த கட்'டும் இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளதாக இயக்குனர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்தார்.

ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்
author img

By

Published : Sep 28, 2021, 10:41 AM IST

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் என்ற இளமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆன்டி இந்தியன்' படத்திற்கு U/A தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தணிக்கைச் சான்றிதழை பெறுவதில் பல சவால்கள் இருந்ததாக இளமாறன் தெரிவித்துள்ளார்.

“தணிக்கை குழுவினர் படத்தை பார்த்த பிறகு பாராட்டுவார்கள் என நினைத்தோம். ஆனால், (Refuse) நிராகரிப்பதாக சொன்னார்கள். அதன்பிறகு (revision committee) திருத்தக் குழு சார்பாக பெங்களூரில் படத்தை பார்த்தனர். மொத்தம் 38 கட் வேண்டும் என்றார்கள். 200 வார்த்தைகள் வரை கட் செய்ய வேண்டும் என்றார்கள்.

தணிக்கைக் குழுவிடமிருந்து எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை. எனவே நீதிமன்றத்தை நாடினோம். கடந்த 3ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும், நல்ல தீர்ப்புக் கிடைத்தது. நீதிமன்றத்தில் புதிய குழு அமைத்து விசாரித்து, சென்சார் கொடுக்க சொன்னார்கள்.

பயத்துடன் படம்

படம் முழுமையாக வருவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று என்னிடம் சொன்னார் தயாரிப்பாளர். படத்திற்கு நல்ல ரீச் கிடைத்ததற்கு, படத்திற்கு எதிராக புகார் அளித்தவர்கள் தான் காரணம்.

மலையாள படங்கள் உண்மைக்கு நெருக்கமானதாக இருப்பதால் பலருக்கும் பிடிக்கிறது. தீர்ப்பாயம் கமிட்டி அண்மையில் கலைக்கப்பட்டது, மீண்டும் அதை கொண்டுவர வேண்டி தயாரிப்பாளர், இயக்குநர் சங்கங்களுக்கு கடிதம் எழுதினேன். திரைத்துறைக்கு தணிக்கைக் குழு அவசியம்தான்.

U, U/A , A தணிக்கைச் சான்றிதழ் இருக்கிறது. AA..AAA என்று புதிதாக சான்றிதழ் கொடுத்து சட்டத்திற்குள் கொண்டுவந்தால் நல்லதுதான். தற்போதைய சட்டங்களுக்கு உட்பட்டு நல்ல படம் எடுங்க முடியும் என்றாலும் பயத்துடனே எடுக்க வேண்டியுள்ளது.

சுயலாபக்காரர்கள் தான் 'ஆன்டி இந்தியன்'

படத்தில் புகைப்பிடிப்பது குறித்த எழுத்தை பெரிதாக்குமாறும், டிஸ்கிளைமெர் (disclaimer) சற்று விரிவாக 30 விநாடிகள் போடுமாறு கூறினார்கள். படத்தில் காட்சி எதையும் கட் செய்யவில்லை. மறைந்த கில்லி மாறன் காட்சியை மட்டும் மியூட் செய்துள்ளோம். அவரது குரலில் வேறு யாரையும் பேச வைக்க முடியவில்லை.

எனக்குத் தணிக்கைச் சான்றிதழில் பிரச்சினை ஏற்பட்டதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா God is great என்றும் லிபரா ரவீந்திரன் double great என்றெல்லாம் பதிவிடுகிறார்கள். நாட்டில் என்ன நடந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் சுயலாபக்காரர்களைத் தான் 'ஆன்டி இந்தியன்' என்று குறிப்பிட்டுள்ளோம்.

மதத்தின் பெயரால் அரசியல் செய்வோரே ஆன்டி இந்தியன். இந்த படத்திற்கு முதலில் ‘கேனப் பயன் ஊர்ல கிறுக்கு பசங்க நாட்டாமை’ என்று தான் பெயர் வைத்தோம். மூன்று மதம் தொடர்பான படம் இது. குறிப்பிட்ட மதத்தினர் பிற மதத்தவறை அடக்குவதாக காட்டவே பட போஸ்டரில் குரங்கு ஒன்றுக்கு காவி துண்டு போர்த்தப்பட்டுள்ளது. படத்தில் கானா பாடல் ஒன்று இருக்கிறது. விரைவில் அடுத்த படத்தை தொடங்குவேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ருத்ர தாண்டவம் சிறப்புக் காட்சி: சீமானை தரக்குறைவாக பேசிய ஹெச். ராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.