ETV Bharat / city

வேலூர் நிறுவனம் மீதான பண மோசடி வழக்கு:உரிய முறையில் விசாரிக்க உத்தரவு! - chennai high court news

மார்க் என்கிற பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடிப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatவேலூர் நிறுவனம் மீதான பண மோசடி வழக்கை சென்னை நீதிமன்றம் முடித்து வைத்தது

author img

By

Published : Aug 9, 2022, 6:51 PM IST

சென்னை: சென்னையைச்சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'நண்பர்கள் மூலம் மோகன்பாபு விஜயன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அவரும், ஜனார்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம், லஷ்மி நாராயணன் சுந்தரம் ஆகியோரும் பங்குச்சந்தை முதலீட்டு தொழில் செய்யும் "மார்க்" (MARC) என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருப்பதாக கூறப்பட்டது.

அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 26 விழுக்காட்டிற்கு மேலும், மாதத்திற்கு 2 விழுக்காடும் பணமும் திரும்பக்கிடைக்கும் என உறுதியளித்ததாகக்கூறியுதை நம்பி தானும் இரண்டரை லட்சம் முதலீடு செய்தேன்''எனக் குறிப்பிட்டுள்ளார்.

''உறுதி அளிக்கப்பட்டது போல மே மாதம் வரை பணம் திரும்பிக்கிடைத்த நிலையில், ஜூன் மாதம் முதல் பணம் வரவில்லை. இதுதொடர்பாக கேட்டபோது, அலுவலத்தில் தணிக்கை நடைமுறை சார்ந்த சில பிரச்னைகள் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது எனக்கூறினர். மீண்டும் திரும்பக்கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால், மீண்டும் அவர்களைத்தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்கள் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது’எனக் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மார்க் நிறுவனத்திற்கு எதிராக கார்த்திக் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 9) மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் மார்க் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இவ்வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்காணிக்கவும், உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க:'குற்ற வழக்குகளுக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை' - வருந்திய உயர் நீதிமன்ற நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.