சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, வரும் 23ஆம் தேதி முதல் தனது நேரடி தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, ஜனவரி 10ஆம் தேதிக்குள் 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு அறிவிப்பை சுயநலம் என விமர்சிப்பது நியாயமா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி