ETV Bharat / city

குடிசை வாழ் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் - அமைச்சர் வேலுமணி அறிவிப்பு! - குடிசைவாழ் மக்கள்

சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் நாளை முதல் வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

velumani
velumani
author img

By

Published : May 14, 2020, 1:10 PM IST

உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், குடிநீர் விநியோகம் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அமைச்சர் வேலுமணி கேட்டறிந்தார். அப்போது அவர்களிடையே பேசிய அமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். அதன்படி,

• சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள 650 குடிசைப் பகுதிகளில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

• ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக்கவசங்கள் என துணியாலான சுமார் 50 லட்சம் முகக்கவசங்கள் நாளை முதல் இப்பகுதிகளில் வழங்கப்படும்.

• மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் பணியாளர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து, வீடுகள்தோறும் சென்று பாதுகாப்புடன் பணிபுரிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

• பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி படிப்படியாக குடிநீர் பணிகள், நீராதாரப் பணிகள் மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு பணிகளை தொடங்க வேண்டும்.

• அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் சூடான, சுகாதாரமான உணவு விலையில்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

• தினசரி காய்கறி சந்தைகளின் செயல்பாடு மற்றும் தெருக்களில், தள்ளுவண்டிகளில் சென்று காய்கறிகளை பொதுமக்களுக்கு இடைவெளியுடன் விற்பனை செய்வதைக் கண்காணிக்க வேண்டும்.

• அனைத்து தூய்மைப் பணியாளர்களும் கையுறை, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

• கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பின்னடைவில் முதலிடத்தில் இருக்கிறது - கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.