ETV Bharat / city

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணியின் வழக்குத் தள்ளுபடி - அமைச்சர் வேலுமணி செய்தி

minister sp velumani case dismissed
அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணி வழக்கு தள்ளுபடி
author img

By

Published : Mar 26, 2021, 12:13 PM IST

Updated : Mar 26, 2021, 2:50 PM IST

12:04 March 26

சென்னை: அறப்போர் இயக்கத்துக்கு எதிராக அமைச்சர் வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது. நிலுவையில் உள்ள இந்த வழக்கை எதிர்மறையாகக் கருதக் கூடாது என இருதரப்பும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

இதையடுத்து இந்த உத்தரவை மீறி வழக்கு குறித்து பத்திரிகை, ஊடகம், சமூக வலைதளம் ஆகியவற்றில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்தினருக்கு எதிராக அமைச்சர் வேலுமணி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை எதிர்மறையாக கருதக்கூடாது என்றுதான் உத்தரவிட்டுள்ளோமே தவிர, பரப்புரையில் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடவில்லை எனத் தெளிவுப்படுத்தினர். 

தேர்தல் பரப்புரையில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் தவறில்லை என்றும், அமைச்சர் வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அரசியல் நோக்குடன் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி அதைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.

மேலும், அமைச்சர் வேலுமணிக்கு 10 ரூபாய் அடையாள அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டபோது, உள்நோக்குடன் இந்த வழக்கைத் தொடரவில்லை என வேலுமணி தரப்பில் தெரிவித்ததை அடுத்து அபராதத்தை மட்டும் நீக்கினர்.

இதையும் படிங்க: நடிகர் ஆர்யா ஏமாற்றியதாக ஜெர்மனி பெண் புகார் அளித்த விவகாரம்: மேனேஜர் அர்மான் முன் ஜாமீன் மனு

Last Updated : Mar 26, 2021, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.