அதிமுக கூட்டணியில் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி களமிறங்கும் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக மோகன்ராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய ஜெயக்குமார், திமுகவில் வாரிசுதாரர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்கும் என்றும், சாதாரண மீனவ குடும்பத்தைச் சேர்ந்த தன்னை இன்று அமைச்சராக உயர்த்தியது அதிமுகதான் எனவும் பேசினார்.
மேலும், மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்பதே திமுகவின் வேலை என குற்றம்சாட்டிய அவர், தயாநிதி மாறன் போன்ற திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமே லாபம் எனவும் தெரிவித்தார்.