சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லி செல்கிறது. டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "காவிரி மேலாண்மை வாரியம் மேகதாது குறித்து விவாதிக்க உரிமை இல்லை. வழக்கறிஞர்கள் கருத்து கேட்டு அதன் படி செயல்படுவது முறையல்ல.
கே.ஆர்.சாகர், கபினி அணைகளுக்கு கீழ் உள்ள இடம், தண்ணீர் எங்களுக்கு சொந்தமானது. அதில் தடுப்பணை கட்டுவது ஆக்கிரமிப்பு இது சரியல்ல. இதில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். கர்நாடகாவிலும் மத்திய அரசும் பாஜக என்று போக கூடாது.
காவிரி மேலாண்மை வாரியத்தில் அஜண்டா வைத்தது தவறு என்பதை கூட்டத்தில் பேசுவோம்" இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவரிடம் அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து கேட்டதற்கு, அப்படியா எனக்கு தெரியாது என்றார்.
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை