சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரின் 3ஆம் நாளான இன்று (அக்.19) வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி தனது தொகுதி குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், "நீர் நிலைகளை தூர் வாரி, வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும். அதேபோல், கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் உள்ள ஏரிகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர்.
அவர்களை அப்புறப்படுத்தாமல் ஏரிகளை தூர்வாரி வேலிகள் அமைக்கப்படுமா?" என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "நிதிச்சுமையால் ஏரியை தூர்வாருவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதில் வேலி அமைப்பது என்பது இன்னும் சுமையை ஏற்படுத்தும். நீர் நிலைகளில் உள்ள இடங்களில் வீடு கட்டி ஆக்கிரமிப்பு ஏற்படுத்துபவர்களை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி அப்புறப்படுத்தி வருகிறோம். அரசு நிலங்களில் முறையற்ற முறையில் யார் வீடு கட்டி இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆட்சியில் மழையோ மழை... எங்கு பார்த்தாலும் வெள்ளம்... துரைமுருகன்