ETV Bharat / city

அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறையில் ஃபெயில் மார்க் வாங்கியுள்ளார் - ஜெயக்குமார் தாக்கு! - Anbil Magesh

அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறையில் ஃபெயில் மார்க் வாங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறையில் பெயில் மார்க் வாங்கியுள்ளார்  - ஜெயக்குமார்

author img

By

Published : Sep 6, 2022, 5:33 PM IST

சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறையில் ஃபெயில் மார்க் வாங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை - ராயபுரத்தில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக இருந்த கட்சி நிர்வாகியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, படத்தை திறந்து வைத்தபின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறையில் ஃபெயில் மார்க் வாங்கியுள்ளார். உதயநிதி ரசிகர் மன்றத்தைக்கவனிக்கும் புதிய துறையினை உருவாக்கி, அதன் அமைச்சராக செயல்பட்டு, அதில் தான் அவர் பாஸ் மார்க் வாங்கியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை மிகவும் மோசமாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, தாலிக்குத்தங்கம் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தற்போது 'புதுமைப்பெண் திட்டம்' என மாற்றம் செய்துள்ளனர். 'தாலிக்குத் தங்கம்' வழங்குவதை கைவிட்டு, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் 'தாலிக்குத்தங்கம்' திட்டத்தின் மூலம் 7ஆயிரம் கோடி மதிப்பில், 7 டன் தங்கம் 14 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர். ஆனால், தற்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் அரசு கல்லூரி மாணவிகளுக்கு மட்டும் என மாற்றம் செய்துள்ளது, யானைப்பசிக்கு சோளப்பொறி போல உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் சமூக நீதியினைப் பாதுகாக்க வேண்டும் என்றும்; மக்களின், மாணவர்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. ஆனால், தற்போது திராவிட மாடல் என்று கூறி, திராவிடத்தையே கொச்சை படுத்திவருகின்றனர், திமுகவினர்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மனப்பூர்மவாக வரவேற்பதாக தெரிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இது ஜெயலலிதாவுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட அழைப்பு விடுக்கும் ஓ.பன்னீர் செல்வம், திமுகவில் சேர்ந்து, ஸ்டாலினுடன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் இணைத்து ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுங்கள்’ என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'என் ஸ்டேட்டஸ் வேற, என் ஸ்டேட்டஸ்க்கு தகுதியானவர்களின் கருத்துக்குப் பதில் கூறுகிறேன். ஆனால், புகழேந்தி யார் என்றே தெரியாதவர். அவரது பேட்டியைப் பார்ப்பதில்லை. போறவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'உங்கள் எண்ணப்படியே நடக்கும்' - சித்தர்போல் பேசிவிட்டுச்சென்ற ஓ.பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.