ETV Bharat / city

'நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்!

சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்
author img

By

Published : Nov 23, 2020, 12:16 PM IST

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்று அதிகாலை 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது இது 740 கி.மீ .தொலைவில் உள்ளது. கரையை கடக்கும் போது 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மிக கனமழை, அதி கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 6 தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோணத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு சென்று உள்ளனர்.

கனமழை, புயல், காற்றை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறித்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான அறிவுறுத்தலும் தொடர்ந்து மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஏரிகளைக் கண்காணிக்கவும், கால்வாய்கள் அடைப்பில்லை என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி, பழைய கட்டடங்களில் வசிப்போர் உடனடியாக அரசு முகாம்களுக்கு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஆதாரப்பூர்வமான தகவல்களை தொடர்ந்து வழங்க, தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் அனைத்து துறையினரையும் அறிவுறுத்தி உள்ளார்” என்றார்.

மேலும், “இடி, மின்னல் சமயத்தில் வெளியே வர வேண்டாம் என்றும், நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், நீர் செல்லும் பாதைகள், கடற்கரை பகுதிகளுக்கு குழந்தைகளை அனுமதிக்க கூடாது,
பொதுமக்களும் அங்கு செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

மக்கள் அத்தியாவசியப் பொருள்களான வலுவான கயிறு, தீப்பெட்டி, மண்ணெண்ணெய், மெழுகு வர்த்தி, பேட்டரி டார்ச், உலர் பழ வகைகள், பிரட் போன்றவற்றை தற்போதே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
கஜா புயல் போன்ற ஒரு தாக்கத்தை இந்தப் புயல் ஏற்படுத்தாது என தகவல் கிடைத்துள்ளது, இந்தப் புயல் கரை கடக்கும் சமயத்தில் 100 கி.மீ க்குள் காற்று வீசக்கூடும். இதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. மக்கள் இதனை எதிர்கொள்ள தயாராகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.