ETV Bharat / city

பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மீதான குற்றப்பத்திரிகை ரத்து - சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்

வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jun 28, 2022, 2:36 PM IST

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றன.

இதையடுத்து இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 9ம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று பேர் சார்பிலும், குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று (ஜூன் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, ஜனநாயக ரீதியிலான போராட்டம்தான் என்றும், எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை என்றும் வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் மூன்று பேர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் வலிமை பெறும் - திருமாவளவன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.