புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதி ராகவேந்திரா நகர் சோதனைச் சாவடி அருகே வேகமாக வந்த காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். காரை தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஓட்டி வந்தார்.
சோதனையின்போது தமிழ்நாட்டுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : எந்த ரக கரோனாவையும் எதிர்த்து நிற்கும் கோவாக்சின் - ஐசிஎம்ஆர்