சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மழை நீரில் நெல் வீணாவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும், இல்லாவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட நெல் மழையில் நனைந்துள்ளதாகவும், இதுசம்பந்தமான முழு விவரங்களைப் பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.
மழையில் நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க உத்தரவு - Rain-soaked paddy bundles
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.