ETV Bharat / city

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும்!

author img

By

Published : Apr 7, 2022, 10:36 AM IST

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு 7.5 இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பில் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madras HC
Madras HC

சென்னை : தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

7.5 இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு: இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, ஏற்கனவே தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே? எனத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், மொத்த இடங்களில்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், நீட் தேர்வு தகுதி அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

மனுதாரர் குற்றச்சாட்டு: அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறி விட்டது எனவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குவதாகக் கூறிய வழக்கறிஞர், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அரசு பாரப்பட்சமாக செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தீர்ப்பு: மார்ச் 17ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்.7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார்கள்.

மேலும், இந்தத் தீர்ப்பில் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு இடம் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், 7.5 இடஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பின்னர் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க : வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக் கட்டணம் குறைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.