ETV Bharat / city

தொழிற்பூங்கா:'விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்' - அமைச்சர் தங்கம் தென்னரசு - சென்னை செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் தளி ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு, அங்கு தொழில் பூங்காக்கள் அமைக்க வேண்டியது அரசின் அவசியமாக உள்ளதாகவும் அத்துடன், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என ஏற்கெனவே முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் பதில் கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு
author img

By

Published : Mar 24, 2022, 6:47 PM IST

சென்னை: சட்டப்பேரவையின் விவாதநாளின் இறுதி நாளான (மார்ச் 24) இன்று சட்டப்பேரவையில், நேரம் இல்லா நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் தளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தொழில் பூங்காக்களை அமைக்க நிலம் கையகப்படுத்தும் போது, விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கையகப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் தொழிற்பூங்கா: இதுதொடர்பாக மேலும் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முன்னேற்ற, நில வங்கி உருவாக்க வேண்டும். அத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் தொடங்க ஏற்ற இடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் தொழிற்சாலைகள் வந்துகொண்டிருப்பதாகக் கூறிய அவர், தொழில் பூங்காக்கள் அமைக்க வேண்டியது அரசின் அவசியமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழில் பூங்காக்களை அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கையகப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், விவசாயிகள் இடம் தர முன்வந்தால் அதை அரசு பெற்றுக் கொள்ளும் என்றும், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: ஆதிதிராவிடர் நலப்பள்ளி, விடுதி மாணவர்களுக்கு நிதி தேவை: சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.