சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது குறித்து ஏஐசிடிஇ, யுசிஜி விதிமுறைகளை அரசு பின்பற்றும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “யுஜிசி, ஏஐசிடிஇ விதிகளை தமிழ்நாடு அரசு முழுமையாகப் பின்பற்றும். இவர்களின் விதியை பின்பற்றியே அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ சார்பில் அரியர் தேர்வுகள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அரியர் தேர்வுகளுக்குத் தமிழ்நாடு அரசு விலக்கு அளித்தது குறித்து அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரத்திற்கு எந்தவித கோரிக்கை முன் வைத்தார்கள் என்பது தொடர்பாக விளக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம்தான் தெரிவிக்க வேண்டும்.
அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
யுஜிசி, ஏஐசிடிஐ வழிகாட்டுதல்படிதான் அரியர் மாணவர்களுக்கு தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரியர் மாணவர்கள் விவகாரத்தில் எந்தக் கடிதமும் ஏஐசிடிஇ வாயிலாகத் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கப்பெறவில்லை" எனத் தெரிவித்தார்.