நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக களமிறங்கி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து மநீம கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், சந்தோஷ் பாபு ஐஏஎஸ், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகினர்.
தேர்தல் பரப்புரையின்போது சூறாவளி பரப்புரையை மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, தற்போது சூறாவளி காற்றாக வீசிய உட்கட்சிப் பூசலால் முக்கிய நிர்வாகிகளை இழந்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இதுகுறித்து பேசி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 5 நிமிடம் உள்ள அந்த உரையாடலின் முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு..
என் உயிருள்ளவரை..
என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்.
உருமாறிய மநீம:
கட்சியின் உள்கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்காக மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்.
எது சர்வாதிகாரம்?
மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சர்வாதிகாரமாகத் தெரிகிறது.
தூர்ந்து போனதா மையக்கிணறு:
நம் மையக் கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்துபோய்விடாது என்பது தற்கால தாக சாந்திக்காக குடிக்க வந்தவர்களுக்கு புரியாது.
இதையும் படிங்க: 'பிக்பாஸ் வீடு மாதிரி ஆய்டுச்சு... அடுத்த எலிமினேஷன் யாரு?' - கமலை கலாய்த்த கஸ்தூரி