ETV Bharat / city

'இயற்கைச் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்களே; காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - கமல் ஹாசன்

சென்னை: இயற்கைச் சீற்றங்களினால் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான் என்பதால், அவர்களைக் காப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

hasan
hasan
author img

By

Published : Jul 21, 2020, 3:13 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மழை ஆரம்பித்து விட்டது. புயல் சின்னங்கள் நிலைகொள்ளும். மீண்டும் முன்பே நாம் எதிர்கொண்ட பிரச்னைகள் செய்திகளாகும். சுனாமி, பெருமழை, பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் முதலில் பாதிக்கப்படுவது மீனவச் சமுதாயமே. ஒவ்வொரு பேரிடரின்போதும் படகுகள் காணாமல் போவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

தற்போது பருவமழை தொடங்கியுள்ள சூழலில், மீண்டும் ஒரு புயல் காண சூழல் உருவாகலாம். எனவே அரசு கடந்த காலங்களில் செய்த அலட்சியப் போக்கைக் கைவிட்டு, ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதன்படி, ரேடியோ தொலைபேசி மூலம் மீனவர்களுக்குத் தகவல்களைத் தருவது, மிதவைக் கவசம் வழங்குவது, தொலைத்தொடர்பு மையம் அமைப்பது, கடல் ஆம்புலன்ஸ் தயாராக வைத்துக்கொள்வது போன்றவை மூலம் அவர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தடுக்க முடியும்.

மேலும், தேசத்தின் கடல்சார் வர்த்தகம் 2019இல் சுமார் 60 ஆயிரத்து 881 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மீனவர்களின் பங்கு இப்படி இருக்க, மீனவர்கள் தங்கள் உயிரை முதலீடாக வைத்துச் செய்யும் சூழலில் அரசு மேலே குறிப்பிட்ட கோரிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தி அவர்களைக் காக்க வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.