சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வந்த தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் பள்ளி முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டு, சூறையாடப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுலவர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிர்வாகக் காரணங்களினால், AKT அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,நீலமங்கலம், கள்ளக்குறிச்சி மற்றும் AKT நினைவு வித்யா சாகேத் பள்ளி (CBSE), நீலமங்கலம் ஆகியவற்றிற்கு மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த விண்ணப்பதாரர்களுக்கான மாற்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி விண்ணப்பதாரர்கள் மாற்று தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுமையத்தில் தேர்வு எழுத வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 12 ம் வகுப்பு துணைத் தேர்வு; நாளை முதல் ஹால் டிக்கெட்