சென்னை: டெல்லி செல்வதற்காக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களிடம் கட்சியை கொண்டு செல்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்தியா முழுவதும் தவறான கொள்கையை சொல்வது தான் பாஜகவின் கொள்கை என்றும், எந்த ஊரில் சரியான கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். பாஜகவின் கருத்து் மக்களிடத்தில் அதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? மதுரையில் ஓபிஎஸ் பேட்டி