ETV Bharat / city

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து வழக்கு - நீதிமன்றம் இன்று தீர்ப்பு - TamilNadu Today Important News

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

சசிகலா தொடர்ந்த வழக்கு
சசிகலா தொடர்ந்த வழக்கு
author img

By

Published : Apr 8, 2022, 7:20 AM IST

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றபிறகு, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, சசிகலா, டிடிவி தினகரனை கட்சியின் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்து 2016 டிசம்பர் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை: சசிகலாவின் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் விசாரணை சென்னை நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

சசிகலா தரப்பில், பொதுக்குழு தீர்மானம் செல்லாது எனவும் பொதுச்செயலாளராக எந்தக் கூட்டத்தையும் கூட்டாததால், அதில் புதிய பதவிகளை உருவாக்கி அறிவிக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என வாதிடப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல் 8) இந்த வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

இதையும் படிங்க: 'அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ரத்து ஏன்? - அமைச்சர் பெரியகருப்பனின் பலே விளக்கம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.