சென்னை: ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகைய்யா (40). இவர் குன்றத்தூரில் ஆட்டோ கேர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனிடையே இவருக்கு LinkedIN மூலம் ஜெர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் கட்ஸ்மித் மற்றும் பூஜா குமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மத்தியாஸ் கட்ஸ்மித், தான் ஆன்லைன் மூலம் குறைந்தளவு பணத்தை பெற்றுக்கொண்டு மருந்துகளை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய முருகையா, கடந்த ஜனவரி மாதம் Byaosma Active Liquid என்ற மருந்தை வாங்க ஆன்லைனில் 35 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை கொடுத்துள்ளார்.
அதற்கு மத்தியாஸ் கட்ஸ்மித் அனுப்பிவைத்த மருந்துகளை ஆய்வு செய்தபோது அவை போலியான மருந்துகள் என்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த முருகைய்யா ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரிவாளால் வெட்டிவிட்டு 5 கிலோ நகைகள் கொள்ளை - 5 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி...!