ETV Bharat / city

'தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அமெரிக்க தொழிலதிபர்கள் இணைய வேண்டும்' - துணை முதலமைச்சர் வேண்டுகோள்!

author img

By

Published : Nov 15, 2019, 9:52 PM IST

அமெரிக்க சிறு, குறு தொழில்கள் கவுன்சில் நிர்வாகிகளை நேரில் சந்தித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அமெரிக்க தொழிலதிபர்கள் இணைய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

OPS USA

அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வாஷிங்டன் நகரில், அமெரிக்க சிறு, குறு தொழில்கள் கவுன்சிலின் நிர்வாகிகளை நேரில் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளைப் பெறுவது குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய பன்னீர்செல்வம், ' இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டில் புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கை, ஸ்டார்ட் அப் இன்னோவேஷன் கொள்கை, உணவுப் பதப்படுத்தும் கொள்கை, எரிசக்தி கொள்கையை வெளியிட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மேலும், 'சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தாமதமின்றி அரசு அனுமதி வழங்குகிறது. இதற்கென அரசு தனியாக இணையதளம் ஆரம்பித்து அதன்மூலம், ஏற்கெனவே 10 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.

அமெரிக்க முதலீட்டாளர்களுடன் பன்னீர்செல்வம்

எனவே, தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது. தமிழ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: 'திரிஷ்யம்' இயக்குநரின் மிரள வைக்கும் 'த பாடி' ட்ரெய்லர்!

Intro:Body:அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றுள்ள பன்னீர் செல்வம், வாஷிங்டன் டி சி நகரில் இந்திய - அமெரிக்க சிறு குறு தொழில்கள் கவுன்சில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் பெறுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி புதிய கண்டுபிடிப்புகளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது உலக முதலீட்டாளர் மான்னட்டின் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 43 பில்லியன் அமரிக்க டாலர் முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் 2018 ஆம் ஆண்டில் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை, ஸ்டார்ட் அப் இன்னோவேஷன் கொள்கை, உணவு பதப்படுத்தும் கொள்கை, எரிசக்தி கொள்கையை வெளியிட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க தாமதமின்றி அரசு அனுமதி தருகிறது. இதற்கென அரசு தனியாக இணையத்தளம் ஆரம்பித்து உள்ளது. இந்த இனைய தளத்தின் மூலம் ஏற்கனவே 10 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பயன் அடைந்துள்ளன. எனவே தொழில் புரிய அணைத்து உதவிகளையும் செய்ய தமிழகம் தயாராக உள்ளது. தமிழ் நாட்டின் வளர்ச்சி பாதையில் நீங்கள் அனைவரும் இனைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.