Local body election: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு உள்ள நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் டிசம்பர் 29ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், மாவட்ட செயலாளர்கள் பகுதி வாரியாக நேர்காணல் நடத்தி இறுதி வேட்பாளர் பட்டியலை தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் கூட்டணி கட்சியினர் போட்டியிட கூடிய இடங்கள் குறித்து முடிவு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல், கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் நகர்புற, பேரூர் பகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Coimbatore Police Transferred: சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர்கள் பணியிட மாற்றம்