ETV Bharat / city

சென்னை சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்! - Chennai Polling Station More about this source textSource text required for additional translation information Send fee

சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

சென்னை சட்டப்பேரவைத் தொகுதி
சென்னை சட்டப்பேரவைத் தொகுதி
author img

By

Published : Apr 5, 2021, 6:42 PM IST

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.6) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னையிலுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொத்தம் 5,911 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 2,157 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும். இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு 7,181 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 537 VVPAT இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன.

இயந்திரங்களை எந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, எந்தெந்த இயந்திரங்கள் என கணினி குலுக்கல் முறையில், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் அவர்கள் கையெழுத்திட்டு, பாதுகாப்பு அறை (strong room) திறக்கப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் உடன் செல்கின்றனர். மேலும், அனைத்துப் பணிகளையும் மாலைக்குள் முடிக்கவேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நாகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.