கனமழையால் சென்னை திணறிவரும் நிலையில், கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர் மழையில் நனைந்து அந்த இளைஞர் அங்கேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார். அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக அருகேயிருந்த அனைவரும் கருதியுள்ளனர்.
இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி ஆய்வாளர் ராஜேஸ்வரி சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளார். அந்த நபர் உயிருடன் இருப்பதை அறிந்துகொண்ட ராஜேஸ்வரி, சிறிதும் தாமதிக்காமல் உதயாவை தனது தோளில் தூக்கியுள்ளார். அவரை தோளில் சுந்துகொண்டுவந்து ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.
மழைக் களத்தில் துரிதமாகச் செயல்பட்டு ஒரு உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்துவருகிறது.
இதையும் படிங்க: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்