ETV Bharat / city

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு எடுபடாது - டி. ராஜா - டி. ராஜா

சென்னை: பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவது உலக அரங்கில் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

raja
raja
author img

By

Published : Jan 22, 2020, 4:41 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது ஒரு முக்கியமான பிரச்னை குறித்து விவாதித்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து, தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்தோம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் வேறு சில நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது என்பதை பிரதமர், உள்துறை அமைச்சர் உணர வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளால் கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஏழை, பட்டியலின மக்களுக்கும் எதிரானது.

ஆர்.எஸ்.எஸ்-இன் உள்நோக்க கருத்தியல் படி, இந்தியாவை மத அடிப்படை ஆட்சியாக மாற்ற முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அரசியலமைப்பு சட்டம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. அமித்ஷா எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமைச் சட்டம் திரும்ப பெறப்படாது என்கிறார். இது சர்வாதிகாரத்தின் குரல். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

இந்திய பொருளாதாரம் ஆழமான நெருக்கடியில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள் நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 2020, பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாடுபடும் மக்களுக்காக இருக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பெரியார் சமூக நீதிக்காகப் போராடியவர். சாதிய விடுதலைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் எவருக்கும் அஞ்சாமல் துணிவோடு போராடியவர். அப்படிப்பட்டவரைப் பற்றி யார் கருத்து சொன்னாலும் சர்ச்சையை தவிர்க்க வேண்டும். பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவது உலக அரங்கில் எடுபடாது “ என்றார். இச்சந்திப்பின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவதை தவிருங்கள்

இதையும் படிங்க: 'நாட்டில் பல பிரச்னைகள் இருக்கு, ரஜினி பிரச்னையைப் பத்தி மேலும் பேசாதீங்க' - கடுப்பான திருநாவுக்கரசர்

Intro:Body:பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் - கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயளாலர் முத்தரசன் உடன் இருந்தார்.

அதன் பின்னர் தி.நகர் பாலன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது ஒரு முக்கியமான பிரச்சனை குறித்து விவாதித்தோம் என தெரிவித்த அவர் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார். இதை பாஜக ஆளும் மாநிலத்தில் அடக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட தாக்குதலில் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் பதிவேடு எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பதை ஆலோசித்தோம். திமுக கருத்து படி தோழமை கட்சிகளுடன் அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டம் வேறு சில நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது என்பதை பிரதமர், உள்துறை அமைச்சர் உணர வேண்டும். இது போல் மத்திய அரசு செயல்படுவதால் கூட்டாச்சி தத்துவத்தை சீர்குலைக்கும்.

குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஏழை, தலித் மக்களுக்கும் எதிரானது. குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, என்.பி.ஆர் மூன்றும் ஒன்றுக்கு ஒன்று வேறுபாடு இல்லை. மூன்றையும் சேர்ந்து பார்த்தால் அது இந்திய ஏழை மக்களுக்கும் எதிரானது என்பது புரியும்.

ஆர்.எஸ்.எஸ் உள் நோக்க கருத்தையல் படி இந்தியாவை மத அடிப்படை ஆட்சியாக மாற்ற முயற்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றது.

அரசில் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அரசில் சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ், பாஜக செயல்படுகின்றது. எனவே அமித்ஷா எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டம் திரும்ப பெறாது என கூறுகின்றார். இது சர்வாதிகாரத்தின் குரல்.

இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இந்திய பொருளாதாரம் ஆழமான நெருக்கடியில் உள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள் நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக உள்ளது..
தற்போது சூழ்நிலை படி பெரும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தற்போது வரும் நிதிநிலை அறிக்கையில் இருக்கும். நிதிநிலை அறிக்கை 2020 பெரு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இருக்குமா அல்லது பாடுபடும் மக்களுக்காக இருக்குமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்..

குடியுரிமை சட்டம் மேல் இடைக்கால தடை இல்லை என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன கூறும் என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும்..

குடியுரிமை சட்டம் குறித்து அரசு பொய்களை பரப்பி வருகின்றது. காஷ்மீர் பிரச்சனை, சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்து பொய் பேசி வருகின்றனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ் யாராக இருந்தாலும் நான் விவாதிக்க தயார்

ஜெ.என்.யூ பற்றி குருமூர்த்தி கூறிய கருத்தை நிராகரிக்கிறேன்.

தொடர்ந்து அவர் பேசுகையில் பெரியார் குறித்து ரஜினி என்ன நினைத்து பேசினார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.
பெரியார் சமூக நிதிக்காக போராடியவர். அவர் பற்றி யார் கருத்து சொன்னாலும் சர்சையை தவிர்க்க வேண்டும். பெரியார் குறித்து சர்சையாக பேசுவது உலக அரங்கில் எடுபடாது.

கேரள ஆளுநர் மாநில அரசுக்கும் உள்ள பிரச்சனை குறித்த கேள்விக்கு, ஆளுநர் ஆளுனர் தான். மாநில அரசு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒன்று என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.