ETV Bharat / city

கரோனா பொது முடக்கத்தால் கண் நோய் பாதிப்பு 5 மடங்கு அதிகரிப்பு! - கரோனா பொது முடக்கம்

சென்னை: கரோனா பெருந்தொற்று காலத்தின்போது முதிர்வடைந்த கண்புரை, உலர்ந்த கண்கள் உள்ளிட்ட கண் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால்  கண் நோய் பாதிப்பு 5 மடங்கு அதிகரிப்பு!

author img

By

Published : Feb 20, 2021, 6:54 AM IST

முதிர்ச்சியடைந்த கண்புரை நோய், கண் தொற்றுகள், தீவிர உலர் கண்கள் பிரச்சினை, டிஜிட்டல் (எண்ம) பயன்பாட்டின் காரணமாக கண் அழுத்தம், கருவிழி ஒட்டு நிராகரிப்பு ஆகியவற்றால் அவதியுறுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கையோடு மக்களில் பெரும்பாலான கண் பாதிப்பு நிலைகளின் தீவிரத்தை கோவிட்-19 பெருந்தொற்று அதிகளவில் மோசமாக்கியிருக்கிறது.

இது குறித்து மருத்துவர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால் கூறுகையில், “2019ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தனது மருத்துவமனைக்கு வருகைதந்த அனைத்து கண்புரை நோயாளிகளில் 10 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள், முதிர்ச்சியடைந்த கண்புரை நிலையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

2020ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த அளவானது, ஐந்து மடங்கு அதிகரித்து 50 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. அதைப்போலவே, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் அழுத்தத்தினால் உருவாகின்ற உலர்ந்த கண்கள் நோய்களின் எண்ணிக்கையும் அதே கால அளவில் 10 விழுக்காட்டிலிருந்து 30 முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது.

உரிய காலத்தில் பரிசோதனைக்கு வர பல நோயாளிகள் தயங்கியதன் காரணமாக, பல நோயாளிகளிடம் ஏற்கனவே இருந்த கண்விழி விறைப்பு மோசமாகியிருப்பதைக் கண்டறிந்தோம். கருவிழி ஒட்டு சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் கருவிழி ஒட்டு நிராகரிப்பு, கண்ணில் உயர்அழுத்தம் போன்ற சிக்கல்களும் காணப்பட்டன.

இப்பெருந்தொற்று காலத்தின்போது, நீரிழிவு நிலையுள்ள பலர் உரிய காலத்தில் கண் பரிசோதனைகளைச் செய்யாமல் அலட்சியப்படுத்தியதால், அவர்களது விழித்திரையில் கடுமையான சிக்கல்கள் உருவாகியிருந்தன” எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள் துறைத் தலைவர் சௌத்ரி, “டிஜிட்டல் பயன்பாட்டின் காரணமாக கடந்த சில மாதங்களில் ஏற்படும் கண் அழுத்தம், உலர் கண்கள் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது.

டிஜிட்டல் சாதனங்களை அளவுக்கு மீறி பயன்படுத்துவது, பணி, தனிப்பட்ட வாழ்க்கைச் சமநிலை இழப்பு ஆகியவற்றின் காரணமாகவே இத்தகைய பாதிப்புகள் உருவாகின்றன.

பொதுமுடக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களில், கண் வெண்படல அழற்சியோடு சில நோயாளிகள், கருவிழி நாள அடைப்புகளுடன் வேறு சில நோயாளிகளையும் கண்டறிந்தோம். அதற்குப் பிறகு அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது” என்றார்.

இதையும் படிங்க...'கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை முக்கியம்' - கண் மருத்துவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.