ETV Bharat / city

2021ஆம் ஆண்டு 9,092 பேர்களுக்கு காசநோய் பாதிப்பு - பெருநகர சென்னை மாநகராட்சி தகவல் - விழிப்புணர்வு தேவை

சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு காசநோய் கண்டறியப்பட்ட 9,092 நபர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சென்னைப் பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
author img

By

Published : Mar 24, 2022, 7:07 PM IST

சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு 9,092 நபர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 36 காசநோய் அலகுகளுடன் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 161 நுண்ணோக்கி மையங்கள், 13 Genexpert கருவிகள் CBNAAT மற்றும் TrueNat கருவிகள் உள்ளன. மேலும், 7 நடமாடும் வாகனங்களும் உள்ளது.

அரசு சார்பில் சிகிச்சை: மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காசநோய் உள்ளதா என்ற பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு 17,174 நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9,092 நபர்களுக்கு, காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில் தனியார் மருத்துவமனைகளில் 4,348 நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.

காசநோய் உள்ளவர்களுக்கு 6 மாதம் முதல் 18 மாதம் வரை அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சைகளுக்கு தேவையான அனைத்து மருந்து பொருட்களுக்கான செலவுகளை அரசே ஏற்கிறது.

வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்: மேலும், காசநோயாளிகளின் சிகிச்சை காலத்தில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி தகவல் தெரிவிக்கிறது.

இரண்டு வாரம் தொடர்ந்து இருமல், காய்ச்சல் மற்றும் சளியில் இரத்தம் இருந்தால் உடனடியாக காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும்; பொதுமக்கள் சரியான நேரத்தில் பரிசோதனை மேற்கொண்டு காசநோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது எனவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'கலைஞர் இருந்திருந்தால் முதலமைச்சரின் பணியைப் பார்த்து கண்ணீர் விட்டு இருப்பார்' - பேரவையில் துரைமுருகன் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.