ETV Bharat / city

'நீங்க ஓட்டே போடமாட்டீங்க... அமைச்சர் பதவி மட்டும் கேக்குதோ!' - cabinet

சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யாமல் அமைச்சர் பதவி மட்டும் கேட்பது சரியில்லை என பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இல கணேசன்
author img

By

Published : May 31, 2019, 12:05 PM IST

Updated : May 31, 2019, 2:10 PM IST

பாஜக மூத்தத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டிலிருந்து யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், 'இப்போது அமைந்திருக்கும் அமைச்சரவை முழுமையானது இல்லை. இன்னும் சில இடங்கள் பாக்கி உள்ளது. சிறிது கால அவகாசம் எடுத்து முழுமையாக நிரப்புவார்கள்.

இல கணேசன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகிய இருவர் அமைச்சரவையில் பதவி வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யாமல் அமைச்சரவையில் மட்டும் இடம் கேட்பது சரியில்லை' என்றார்.

பாஜக மூத்தத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டிலிருந்து யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், 'இப்போது அமைந்திருக்கும் அமைச்சரவை முழுமையானது இல்லை. இன்னும் சில இடங்கள் பாக்கி உள்ளது. சிறிது கால அவகாசம் எடுத்து முழுமையாக நிரப்புவார்கள்.

இல கணேசன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகிய இருவர் அமைச்சரவையில் பதவி வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யாமல் அமைச்சரவையில் மட்டும் இடம் கேட்பது சரியில்லை' என்றார்.

Intro:பாஜக மூத்த தலைவர் இல கணேசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி




Body:பாஜக மூத்த தலைவர் இல கணேசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

அப்போது பேசிய அவர் 2014ம் ஆண்டை விட கூடுதலான இடங்களை பிடித்து வெற்றி பெற்று நேற்றைய தினம் பிரதமராக கூடியவர்கள் பதவி ஏற்றனர் அந்த விழாவிற்கு சென்று வருகிறேன் என தெரிவித்தார்

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் அளிக்கவில்லை எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு

தமிழகத்தில் இருந்து அண்ணா திமுக சார்பில் ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அதை குறித்து அவர்கள்தான் கருத்து கூற வேண்டும் என்னால் கூற முடியாது என்றார்

ஆனால் கேரளாவில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை ஆனால் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்து இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு

அவர் பாஜக மாநில தலைவர் ஆவார் அவருக்குப் பதவி வழங்குவதற்கு எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என தெரிவித்தார் இப்போது அமைந்திருக்கும் அமைச்சரவை முழுமையானது இல்லை இன்னும் சில இடங்கள் பாக்கி உள்ளது சிறிது கால அவகாசம் எடுத்து முழுமையாக நிரப்புவார்கள் என தெரிவித்தார்

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதியாக இல்லை என்று சொல்வதைவிட தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் இரண்டு பேர் அமைச்சரவையில் பதவி வகிக்கின்றனர் ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளனர் என தெரிவித்தார்

ஸ்டாலின் அவர்கள் ஆலயத்திற்கு முன்னால் நெற்றியில் வைத்து குங்குமத்தை அழித்தார் அது ஆந்திர மாநிலத்தில் பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒன்று அதை ஏற்றுக்கொண்டு பின்னால் கூட அழித்திருக்கலாம் ஸ்டாலினால் குங்குமத்திற்கு இந்து மதத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றார்

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு

தமிழக பாஜக சார்பில் லோக் சபை உறுப்பினரும் யாருமில்லை மேல் சபை உறுப்பினரும் யாரும் இல்லை அதனால் அதற்கு வாய்ப்பில்லை அப்படி ஒரு நிலை வந்தால் அதை பற்றி பேசுவோம் என தெரிவித்தார்

தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறாமல் அமைச்சரவை மட்டும் கேட்பது சரியில்லை என்றார்

தேசிய அளவில் மூன்றாமிடம் பிடித்த திமுக கட்சிக்கு பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வரவில்லை எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு

நாங்கள் அனைத்து கட்சிக்கும் அழைப்பு தரவில்லை பத்ம விருதுகள் பெற்றவர் களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ள பட்டது என தெரிவித்தார்


Conclusion:இவர் பாஜக மூத்த தலைவர் இல கணேசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்
Last Updated : May 31, 2019, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.