ETV Bharat / city

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பயனளிக்கும் ஐஐடி தொழில் பாதை திட்டம்

author img

By

Published : Aug 13, 2022, 1:47 PM IST

12ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டம் வழங்குகிறது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பயனளிக்கும் ஐஐடி தொழில் பாதை திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பயனளிக்கும் ஐஐடி தொழில் பாதை திட்டம்

சென்னை: ஐஐடி மெட்ராஸ், ஐஐடி தொழில் பாதை திட்டம் குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியலில் பட்டப்படிப்பு திட்டம் மெட்ராஸ் ஐஐடியில் தொடங்கப்பட்டது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பயிலலாம்.

செப்டம்பர் 2022ஆம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி, 21 ஆகஸ்ட் 2022. www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கு ஐஐடி மெட்ராஸ் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE) பங்கு பெறத் தேவையில்லை. அதற்கு பதிலாக 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் வரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.

இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல், வணிகவியல் படித்த போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மேலும், மாணவர்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள், அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன.

மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை (Degree Course) படித்துக் கொண்டே ஐஐடி மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பையும் பயிலலாம். தற்போது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது.

முறையாக 4 வருடம் Bachelor of Science in Data Science & Applications படித்து முடிக்கும் மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் நேரடியாக படிப்பதற்கான Gate Exam எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான தகுதிகள் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களது 12ஆம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60 விழுக்காட்டுக்கும் மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 விழுக்காட்டுக்கும் மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு கட்டணம் 1500 ரூபாய், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அனைவரும் ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in ( Data Science & Applications ) பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள். மேற்கூறிய பட்டப்டிப்பிற்கான செலவினை தாட்கோ கல்விக்கடனாக வழங்குகிறது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.