ETV Bharat / city

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவு - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

author img

By

Published : Sep 8, 2021, 2:13 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல்செய்துள்ள மனுவில், "காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையாகும்.

இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்துக்குத் தடைவிதித்து நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வுசெய்ய ஐஐடியின் இரண்டு பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.

அதன்படி, நியமிக்கப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், சவுமேந்திரர் ஆகியோர் அடங்கிய குழு ஏரிப் பகுதியை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்தது. அறிக்கையில், செம்மஞ்சேரி காவல் நிலையம் ஏரி ஆக்கிரமிப்பு இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தை மட்டும் இடித்துவிட்டால் பெரிய மாற்றம் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நீர்நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்பது குறித்து ஐஐடி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழ்நாட்டில் ஏராளமான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்ற அலுவலர்கள் தவறிவிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவிட்டது.

ஆனால், அலுவலர்கள் இதைக் கண்டுகொள்வதில்லை. நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.

நீர்நிலைகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் தேவைதான். ஆனால், அதற்காக நீர்நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக் கூடாது.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழ்நாடு தலைமைச் செயலர் உறுதிசெய்ய வேண்டும். நீர்நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் மட்டும் 950 நீர்நிலைகள் இருந்தன.

ஆனால், அவை பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர்நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து தமிழ்நாடு அரசு நிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி வழக்கு: விசாரணை செப். 16-க்கு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.