ETV Bharat / city

நகரங்களுக்கான கடினமான நேரங்கள்

author img

By

Published : Nov 7, 2019, 1:59 PM IST

கடுமையான தண்ணீர் பஞ்சம் நமக்கு காத்திருக்கிறது. பல்வேறு காரணங்களால் குடிநீர் வளங்கள் பற்றாக்குறையாகி வருகின்றன. நாம் விழிப்புடன் இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைப்பது கடினம்.

HARD TIMES FOR CITIES

கடந்த கோடையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா எதிர்கொண்ட குடிநீர் பஞ்சத்தின் தீவிரம் அனைவரும் அறிந்ததே. நீர் பாதுகாப்பு பிரச்னையை அரசுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், 2022-க்குள் நீருக்கான போர்களை நடத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறக்கூடும்.

இந்த நெருக்கடிக்கு குடிமக்களும் அரசும் சமமான பொறுப்பு என்று நீர் ஆற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்தியர்கள் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், ஆனால் கடமைகளைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை.

சென்னை, பெங்களூரு மற்றொரு கேப்டவுனாக மாறக்கூடும் என்ற ஷெகாவத்தின் கூற்றை மறுக்க முடியாது. கேப்டவுன், புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை முதன்முதலாக அனுபவித்தது. 40 லட்சம் குடியிருப்புவாசிகள் ஒன்றாக தண்ணீர் விநியோகம் இல்லாமல் கஷ்டப்பட்ட நாள்கள் மூலமாக 2017-18 நீர் நெருக்கடி உலகிற்கு ஒரு படிப்பினை தந்தது.

குடிநீர் பஞ்சம் காரணமாக, நகரவாசிகளுக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டது. இது அமெரிக்க சராசரி மனிதன் அன்றாடம் சவரில் குளிக்க பயன்படுத்தும் நீரின் அளவு. துணிகளைத் துவைக்காமல் தண்ணீரை சேமிப்போருக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டன. நீர் நுகர்வை நிறுத்துமாறு உணவகங்கள், கடைகள், பொது கழிப்பறைகளை அரசு கேட்டுக்கொண்டது.

ஜீரோ தினம் என்ற பெயரில் நகராட்சிகள் பல மாதங்களாக நீர் விநியோகத்தை துண்டித்துவிட்டன. நீர் வீணடிக்கப்படுவதை சரிபார்க்க, காவல்துறை வீடுகளில் சோதனை நடத்தி, கடுமையான அபராதம் விதித்தது.

வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலை இயல்பான மட்டத்திற்கு மேல் உயரும் ​​காலநிலை முறை எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. எல் நினோவின் விளைவு காரணமாக, வெப்பநிலை உயர்ந்தது மற்றும் மேகங்கள் நிலத்தை நோக்கி நகர்ந்தன.

HARD TIMES FOR CITIES
முத்துப் போல் சிந்தாமல் சிதறாமல் தண்ணீர் கோர்க்கும் (சேகரிக்கும்) ஆப்பிரிக்க பெண் (கோப்பு படம்)

இதன் விளைவாக, பசுமைக்கு ஒத்ததாக இருக்கும் தென்னாப்பிரிக்கா கடுமையான பட்டினியை எதிர்கொண்டது. நீர்த்தேக்கங்களால் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. கேப்டவுன் நீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டது, நீர் மேலாண்மைக்கு இன்னொரு உதாரணம். அதிகரித்துவரும் மக்கள் தொகையின் தண்ணீர் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய உள்ளூர் அரசுகள் தவறிவிட்டன.

இது காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளில் ஒன்றாகும். கேப்டவுன் தென்னாப்பிரிக்காவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். நெல்சன் மண்டேலா ஒரு காலத்தில் இங்குதான் சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும், 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கேப்டவுனுக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா மட்டும் 330 கோடி அமெரிக்க டாலர்களை பொருளாதாரத்திற்கு கொண்டுவருகிறது.

இது மிகப்பெரிய வருமான ஆதாரமாக உள்ளது. ஐந்து நட்சத்திர உணவக விடுதிகள், அழகான கடற்கரைகள், அற்புதமான துறைமுகங்கள், கேபிள் கார்கள், தீவு சொகுசு விடுதிகள், பைக் பந்தயங்கள், கிரிக்கெட், ரக்பி ஆகியவை இங்கு ஈர்க்கக்கூடியவை.

HARD TIMES FOR CITIES
வறட்சியான பகுதியில் தண்ணீரை சுமந்துசெல்லும் மராத்திய பெண்மணி (கோப்பு படம்)
ஆனால், இந்த ஆடம்பரங்கள் அனைத்தும் பயனற்றவை என்பதை நீர் நெருக்கடி நிரூபிக்கிறது. நீர் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டது; பொருளாதாரம் மந்தநிலையானது. கேப்டவுனில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து ஒருவர் அலட்சியமாக உணர முடியும். ஆனால் இது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஒரு அபாய மணி எச்சரிக்கை.

பிரேசிலில் சாவ் பாலோ கடுமையான நீர் பற்றாக்குறையின் விளிம்பில் உள்ளது. அதேபோல் பெங்களூருவும் உள்ளது. பெய்ஜிங், கெய்ரோ, மாஸ்கோவும் சிறப்பாக இல்லை.

சென்னையின் நீர் நெருக்கடி குறித்து நாம் அறிவோம். இன்றும், குடியிருப்புவாசிகள் நகரத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நம்பியிருக்கிறார்கள். சுதந்திரத்தின்போது, ​​தனிநபருக்கு நீர் கிடைப்பது ஐந்தாயிரம் கன மீட்டராக இருந்தது. இது 2018இல் 1,540 ஆகக் குறைந்தது. நாம் காடுகளை வெட்டி, அபிவிருத்தி என்ற பெயரில் ஏரிகளை ஆக்கிரமித்துவருகிறோம்.

HARD TIMES FOR CITIES
வடஇந்தியாவில் தண்ணீர் பஞ்சம் (கோப்பு படம்)

பருவமழை ஒழுங்கற்று இருக்கிறது. சரியான நேரத்தில் மழை பெய்தாலும், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. இதன் விளைவாக, நிலத்தடி நீர் மட்டத்தில் ஒரு முக்கியமான வீழ்ச்சி காணப்படுகிறது.

தெலங்கானா அரசால் தொடங்கப்பட்ட மிஷன் ககாதியா மற்றும் மிஷன் பாகீரதா போன்றவை இத்தகைய மோசமான சூழ்நிலைகளில் நம்பிக்கையின் கதிர்கள்.

பூமியில் 70 விழுக்காடு நீர் இருந்தாலும், அதில் மூன்று விழுக்காடு மட்டுமே நன்னீர். உலக மக்கள் தொகை 800 கோடி. குறைந்தது ஒரு கோடி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் வாழ்கின்றனர். 270 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கடினமான சூழலில் வாழ்கின்றனர்.

உலகளவில், சில இந்திய நகரங்கள் உள்பட 500 நகரங்கள் நீர் நெருக்கடியின் விளிம்பில் உள்ளன. ஆண்டுதோறும், மழையின் அளவு குறைகிறது. இதன் விளைவாக, விவசாய விளைபொருள்கள் பாதிக்கப்படுகின்றன.

ஆறுகள் வடிகால்களாக மாறிவருகின்றன. ஒரு நதி ஆக்கிரமிக்கப்பட்டால், துணை நதிகள், சுற்றியுள்ள ஏரிகள் படிப்படியாக காணாமல்போய்விடும். காலநிலை மாற்றத்தை அடுத்து, நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பொறுப்பை அரசுகளுடன் சேர்ந்து மக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதிகரித்துவரும் நெருக்கடியைத் தடுக்க ஒவ்வொரு குடிமகனும் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: தாய் மொழியை போற்றுவோம்!

Intro:Body:

HARD TIMES FOR CITIES

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.