சென்னை: தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு பெறும் சட்ட முன்வடிவை ஆளுநர் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த தகவலை ஆளுநரின் செயலர் சற்று முன்னர் தொலைபேசி வாயிலாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.
இதையும் படிங்க: 'பேரறிவாளனை விடுவிப்போம்'- உச்ச நீதிமன்றம் அதிரடி!