இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கிருஷ்ண ஜெயந்தியின் மகிழ்ச்சியான இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீமைக்கு எதிரான வெற்றியை உறுதி செய்வதற்காக இந்த பூமியில் நிகழ்ந்த கிருஷ்ண அவதாரத்தின் வருகையை இந்தத் திருவிழா குறிக்கிறது. கிருஷ்ண அவதாரத்தில் இறைவன் தீய சக்திகளை வென்று பகவத் கீதை போதனைகள் மூலம் மனித குலத்திற்கான முன்னேற்ற வழிகளைக் காட்டியுள்ளார்.
இந்த நாளில் நம் வாழ்வில் நல்லொழுக்கத்தையும் நன்மையையும் நிலைநிறுத்த நாம் அனைவரும் தீர்மானிப்போம். நம் மாநிலத்தில் அமைதி, நட்பு, நல்லிணக்கம், வளம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றை இந்த நாள் கொண்டுவரட்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி', முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!