’நிவர்’ புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அரசின் பல துறைகளும் முடுக்கிவிடப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், மாநிலம் முழுவதும் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 14 குழுக்கள் தயார் நிலையில் இருக்க வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் உள்ளனர்.
இது குறித்து பேசிய பேரிடர் மீட்புக்குழு அதிகாரியான ரேகா நம்பியார், " சென்னைக்கு ஏற்கனவே 2 பேரிடர் மீட்புக்குழுவும், மாமல்லபுரத்திற்கு ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2 குழுக்கள் விழுப்புரத்திற்கும், 6 குழுக்கள் கடலூருக்கும், புதுச்சேரிக்கு 2 குழுக்களும் மற்றும் ஒரு குழு காரைக்காலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் சூறைக்காற்றுடன் கொட்டும் கனமழை!