ETV Bharat / city

ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை: நால்வர் கைது - கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது

பல்லாவரம் அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்றுவந்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை
ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை
author img

By

Published : Dec 20, 2021, 4:53 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக சங்கர் நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சங்கர் நகர் ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் கருப்புசாமி, ராமசந்திரன், தலைமைக் காவலர்கள் கண்ணன், அண்ணாதுரை ஷெர்லின் ஆகியோர் நிகழ்விடத்திற்குச் சென்று கண்காணித்தபோது கஞ்சா விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து ஆட்டோவில் மறைத்துவைத்து கஞ்சா விற்ற மாங்காட்டையைச் சேர்ந்த சிவசங்கர் (25), கோவூரைச் சேர்ந்த இந்துநாதன் (35), மவுலிவாக்கத்தைச் சேர்ந்த முரளி (29), கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (எ) பாட்டில் மணி (27) ஆகியோரைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, ஆட்டோவைப் பறிமுதல்செய்தனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தரமற்ற உணவு சமைத்து அளித்த கிச்சன் மேற்பார்வையாளர்கள் இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.