சென்னை: குஜராத் மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருமான (Former Minister Anil Joshiyara) அனில் ஜோஸ்யாரா, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த பிப். 7ஆம் தேதி கரோனா பாதிப்பிற்குப் பின்பு, சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனில் ஜோஸ்யாராவிற்குத் தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், (மார்ச் 14ஆம் தேதி) இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று இரவு அவரது உடல் அஹமதாபாத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, பின்னர், அங்கிருந்து அவரது சொந்த ஊரான சுனாகானில் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் - வணிகவரித் துறை பதில் மனு